தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நபர்களைக் கொன்று அந் நரமாமிசத்தை வான் கோழி இறைச்சி எனக் கூறி விற்பனை செய்த நபரொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவது:-
சீனாவில் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவன் ஷங்யாங்மிங் (57). இவர் தொடர்ச்சியாக பலரை கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கினான். பலரின் உடலை எரித்தும், புதைத்தும் தடயங்களை அழித்தான்.
அனைத்துக்கும் மேலாக, தான் கொலை செய்த சிலரின் மாமிசத்தை விற்று பணம் சம்பாதித்துள்ளார். வான் கோழியிறைச்சி என ஏமாற்றி சந்தையில் பகிரங்கமாக விற்றுள்ளான். இதுபோன்று 11 பேரை கொலை செய்த ஷங்யாங் மிங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்த தண்டனை அவனுக்கு நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment