நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » , , » வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.

வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசைகள் இருக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நமக்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வீடுகட்ட பிளான் உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.











வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆனால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதிதாக வீடு கட்ட விரும்புபவர்களுக்கு வீட்டுக்கான பிளான் ( வடிவமைப்பு ) உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.html
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design , Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களில் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து வலது பக்கம் இருக்கும் Wall டூலை பயன்படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக்க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத்துக் கொள்ளலாம்.Transform என்ற டூலை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம் வடிவத்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொத்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Share this article :
 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved