இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை ஒரே சொடுக்கில் சில நிமிடங்களில் நம் கணினியில் விரும்பிய ஃபார்மெட்-ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையத்தில் இருந்து வீடியோக்களை தறவிரக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, சில வீடியோக்களில் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும் அப்படி ஆடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழுவீடியோவையும் தறவிரக்கி தான் கேட்க முடியும். இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய ஃபார்மெட்டுக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.convertvideotoaudio.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி URL என்று உள்ள கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை மாற்ற வேண்டுமோ அந்த தளத்திம் வீடியோ முகவரியை கொடுக்கவும். அடுத்து இருக்கும் Output என்ற கட்டத்திற்குள் எந்த ஃபார்மெட்டில் நமக்கு சேமிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Download என்று இருக்கும் பொத்தனை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ சில நிமிடங்களில் குறிப்பிட்ட ஃபார்மெட்டுக்கு மாற்றப்பட்டு இருக்கும் இதில் இருக்கும் Download ஐகானை சொடுக்கி நம் கணினியில் எளிதாக தறவிரக்கலாம். இனி வீடியோக்களில் உள்ள ஆடியோ மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எளிதாக இத்தளத்தின் மூலம் பெறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு வீடியோ ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.