(Tn) சைப்பிரஸில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கைப் பணிப் பெண்ணுடைய சடலத்தை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக வெளிவிவகார அமைச்சின் கொன்சுயுலர் பிரிவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும் அந்நாட்டின் பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் ரந்தெனிகல கூறினார்.
தலாவ, சுமுடுகமவை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தாயான அஜந்தா ஹேரத், கே. ஏ. சனோஜா சுவர்ணமாலி ஆகிய இரு பெயர்களைக் கொண்ட இலங்கைப் பணிப்பெண்ணையே எஜமான் சுட்டுக் கொன்றுள்ளதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மேற்படி பணிப்பெண் குறித்த முகவர் நிலையமொன்றினூடாக சைப்பிரஸ் சென்ற போதும் சுமார் ஒரு வருட காலம் மாத்திரமே முறைப்படி எஜமான் ஒருவரிடம் வேலைபார்த்துள்ளார். அதன் பின்னர் தனது எஜமான்களை மாற்றி வந்த பணிப்பெண் மூன்றாவது எஜமானராலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது எஜமானிடம் சேவைக்கு சேர்ந்தது தொடர்பில் இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு எவ்வித தகவல்களையும் வழங்கியிருக்கவில்லையெனவும் அவர் கூறினார். இப்பெண் புதிய எஜமானிடம் வேலைக்குச் சேர்ந்து ஒரு வார காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதுடன் எஜமானும் தனக்குத் தானே சுட்டுத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
எஜமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் குறித்த பெண் துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே உயிரிழந்திருப்பதனையும் பிரேத பரிசோதனைகள் மூலம் சைப்பிரஸ் அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில், எதற்காக இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளதனால் சைப்பிரஸ் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகள் முடிவடைந்ததும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படுமெனவும் ரந்தெனிகல குறிப்பிட்டார்.
அத்துடன் உயிரிழந்த இலங்கைப் பணிப்பெண்ணுக்கு அந்நாட்டினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈடு பற்றிய விவரங்களை சைப்பிரஸிலுள்ள கொன்சுயுலர் பிரிவிற்கூடாக அறிந்துகொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment