நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க

புனித கஃபாவை தவாபு செய்ய புதிய மேம் பாலம் திறக்கப்பட்டது (காணொளி இணைப்பு)

26 July 2013

Sheikh Al Sudais

சவூதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் உத்தரவுக்கமைய, இரண்டு புனித மஸ்ஜித்களின் விவகாரங்களுக்கான தலைவர் அஷ்ஷேஹ் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ் அவர்கள், ஊனமுற்ற மற்றும் முதியவர்கள் புனித கஃபாவை தவாபு செய்யவதற்கான தற்காலிகமான மதாப் பாலத்தை கடந்த வியாழக்கிழமை திறந்துவைத்தார்கள்
அஷ்ஷேஹ் அல் சுதைஸ் கூறுகையில், தான் இந்த பாலத்தை பரிசோதனை நிமித்தம் திறந்து வைப்பதாகவும், இதன் செயல்முறை திறப்பு வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெறும் என்று கூறினார்.
12 மீட்டர் அகலமும் 13 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பாலத்தில், ஒரு மணி நேரத்தில் 1,700 சக்கர நாற்காலிகள் இடமளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
இதேபோல் மற்றொரு மாடிப் பாலமும் (one more level) பின்னர் திறக்கப்பட்டு அது புனித மஸ்ஜித்தின் முதல் மாடியுடன் இணைக்கப்படும். விரிவாக்க பணி நிறைவடையும் வரை இந்தப் பாலம் ஊனமுற்ற மக்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பாலத்தின் விரிவாக்கம் பணி முடிந்த பிறகு, அதன் திறன் ஒரு மணி நேரத்திற்கு 105,000 யாத்திரீர்களை உள்ளடக்கக் கூடியதாக அதிகரிக்கும்.
இதன் விரிவாக்கக் காலத்தில் மணி நேரத்திற்கு 48,000 யில் இருந்து 22,000 யாத்ரீகர்ககளை உள்ளடக்கக் கூடியதாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காணொளி 1


காணொளி 2


Mataf Bridge Mataf Bridge 7 Mataf Bridge 6 Mataf Bridge 5 Mataf Bridge 4 Mataf Bridge 3 Mataf Bridge 2
3_6
Continue Reading | comments (1)

ஆமா இந்தக் கப்பலை எப்படி கடல்ல இறக்குவாங்க?....

24 July 2013


சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த தென் கொரியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சன் ஹுரைஜ் ஹோட்டல் விளங்குகிறது.
ஆடம்பரக் கப்பல் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் ஹோட்டல் 65 மீற்றர் நீளமும், 45 மீற்றர் அகலமும் உடையதாகக் காணப்படுகின்றது.
மேலும் 211 தங்கும் அறைகள் உள்ளடங்கலாக கடந்த 2002ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
Continue Reading | comments

மடிக்கணினியை மடியில் வைத்திருக்கலாமா..?



மடியின் மீது லேப்டாப்பை அதிக நேரம் வைத்துப் பயன்படுத்துவதால் ஏதேனும் பிரச்னை வருமா? -  பதில் சொல்கிறார் தோல் நோய் மருத்துவர்  ரத்னவேல்...

லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது. அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி  சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும். அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம்  மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும். இதற்கு ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’ என்று பெயர். 

காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் குளிரிலிருந்து தப்பிக்க, ஒரு பானை நிறைய நெருப்பைப் போட்டு அதை வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொள்வார்கள்.  அப்போதைக்கு குளிரில் இருந்து தப்பித்தாலும் நெருப்பால் உண்டான காயம் தோலில் தடிமனான ரோஸ்ட் போல தங்கிவிடும். இதுதான் ‘ரோஸ்டட்  ஸ்கின் சின்ட்ரோம்’. இது போன்ற பாதிப்பு லேப்டாப் பயன்படுத்துவோருக்கும் வருகிறது. 

லேப்டாப்பில் காரீயம் சேர்த்திருப்பார்கள். அதிக நச்சுத்தன்மை நிறைந்த இந்த தனிமம் உடலுக்கு பல ஆபத்துகளை உருவாக்கும். கான்டாக்ட்  டெர்மடைட்டிஸ் என்ற அலர்ஜியை உருவாக்கும். இதனால் கொப்புளம், அரிப்பு, தோல் தடிப்பு போன்ற நோய்கள் வரும். லேப்டாப்பை தொடர்ச்சியாக  அருகில் வைத்து பார்ப்பதால் கண்ணுக்கு அடியில் ரத்த ஓட்டம் குறைந்து, கருவளையம் நிரந்தரமாகத் தங்கிவிடும். 

மடியின் மேல் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரைமணி நேரத்துக்கு மேல் வேண்டாம். துணி, தலையணை, பிளாஸ்டிக் பொருட்களின்  மீதும் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவது ஆபத்தானது. லேப்டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இப்போது சிறிய ஃபேன்  கொண்ட ‘கூலிங் பேடு’ உபகரணங்கள் வந்துவிட்டன. குழந்தைகளிடம் இருந்து லேப்டாப்பை சற்று தள்ளியே வைத்திருங்கள். 

Continue Reading | comments

காலை உணவை தவிர்த்தால் இதய கோளாறு ஏற்படும் : அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை

001_heart

வாஷிங்டன்: காலை உணவை தவிர்த்தல், இரவில் மிகவும் தாமதமாக உணவை உட்கொள்ளுதல் ஆகியவை, இதயக் கோளாறுகள் ஏற்பட, அதிக வாய்ப்பை உருவாக்குவதாக, அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின், ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம், இது குறித்து கூறியதாவது: உணவுக் கட்டுப்பாடு இன்மை, புகைப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, மதுப் பழக்கம் போன்றவற்றால் மட்டும் இதயக் கோளாறுகள் ஏற்படாது. காலை நேர உணவை தவிர்ப்பதாலும் அதனால், நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளாலும், இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இது தொடர்பாக, 16 ஆண்டுகளாக, 27 ஆயிரம் ஆண்களிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,500 பேருக்கு, முதன்முறையாக, இதயக் கோளாறுகள் ஏற்பட்டதையும் காண முடிந்தது.
இரவு நேரத்தில், மிகவும் தாமதமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு, இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களுக்கு, 55 சதவீதம் இதயக் கோளாறுகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அதே நேரத்தில், இவர்கள், காலை நேர உணவை எடுத்துக் கொண்டு, இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும், நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.
காலை உணவை தவிர்த்தாலோ அல்லது இரவில் நீண்ட நேரத்திற்குப் பின் சாப்பிட்டாலோ அது, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. காலை உணவை தவிர்ப்பதால், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் அடுத்த கட்டமா, இதயக் கோளாறு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Continue Reading | comments

கிழங்குக்குப் பதிலாக குழந்தையின் கையா? வவுனியாவில் அதிசயம்

23 July 2013

வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.










படங்கள்: ரஞ்சன் ராஜரட்ணம் (வீரகேசரி இணையத்தள வாசகர்)

Continue Reading | comments

தையல் வேலைப்பாடுடன் முதலாவது அல்குர்ஆன் (வீடியோ)



முழு தையல் வேலைப்பாடுடன் முதலாவது அல் குர்ஆனை டுபாயை மையமாகக் கொண்டு செயற்படும் சிரிய நாட்டு மொஹமட் மாஹிர் ஹத்ரி என்ற தொழிலதிபரே புதிய கலைவேலைப்பாடுடனான புனித குர்ஆனை தயாரித்துள்ளதாக கல்ப் நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தையல் இயந்திரம், பட்டு நூல், வெல்வட் புடவையைக் கொண்டு இந்தக் குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பஉதவி எதுவும் இன்றி வெறும் கைகளால் அல் குர்ஆன் வசனங்கள் எழுத்தணி வடிவில் உருவாக்கப்பட் டுள்ளது.

இந்த கலைப்படைப்பு தற்போது டுபாய் வர்த்தக கண்டகாட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது டுபாய் சர்வதேச புனித குர்ஆன் கண்காட்சியின் ஓர் அங்கமாகவே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

426 பக்கங்கள், 200 கிலோ கிராம் எடை கொண்ட இந்த குர்ஆன் 5 மில்லியன் யூரோ பெறுமதி கொண்டதாகும்.


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=u-Saz7tS-xE
Continue Reading | comments

இலங்கைப் பணிப்பெண் சைப்பிரஸில் சுட்டுக்கொலை


(Tn) சைப்பிரஸில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கைப் பணிப் பெண்ணுடைய சடலத்தை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக வெளிவிவகார அமைச்சின் கொன்சுயுலர் பிரிவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும் அந்நாட்டின் பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் ரந்தெனிகல கூறினார்.

தலாவ, சுமுடுகமவை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தாயான அஜந்தா ஹேரத், கே. ஏ. சனோஜா சுவர்ணமாலி ஆகிய இரு பெயர்களைக் கொண்ட இலங்கைப் பணிப்பெண்ணையே எஜமான் சுட்டுக் கொன்றுள்ளதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மேற்படி பணிப்பெண் குறித்த முகவர் நிலையமொன்றினூடாக சைப்பிரஸ் சென்ற போதும் சுமார் ஒரு வருட காலம் மாத்திரமே முறைப்படி எஜமான் ஒருவரிடம் வேலைபார்த்துள்ளார். அதன் பின்னர் தனது எஜமான்களை மாற்றி வந்த பணிப்பெண் மூன்றாவது எஜமானராலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவது எஜமானிடம் சேவைக்கு சேர்ந்தது தொடர்பில் இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு எவ்வித தகவல்களையும் வழங்கியிருக்கவில்லையெனவும் அவர் கூறினார். இப்பெண் புதிய எஜமானிடம் வேலைக்குச் சேர்ந்து ஒரு வார காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதுடன் எஜமானும் தனக்குத் தானே சுட்டுத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எஜமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் குறித்த பெண் துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே உயிரிழந்திருப்பதனையும் பிரேத பரிசோதனைகள் மூலம் சைப்பிரஸ் அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், எதற்காக இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளதனால் சைப்பிரஸ் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகள் முடிவடைந்ததும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படுமெனவும் ரந்தெனிகல குறிப்பிட்டார்.

அத்துடன் உயிரிழந்த இலங்கைப் பணிப்பெண்ணுக்கு அந்நாட்டினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈடு பற்றிய விவரங்களை சைப்பிரஸிலுள்ள கொன்சுயுலர் பிரிவிற்கூடாக அறிந்துகொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Continue Reading | comments

செல்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை மணி














செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாவிக்கப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறையை ஜேர்மன் நாட்டு புரோகிராமரான கார்ஸ்டன் நோல் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்த நோல் ”என்னிடம் ஏதாவது ஒரு செல்பேசி இலக்கத்தினை தந்து சில நிமிட அவகாசமும் தாருங்கள், நான் அந்த இலக்கத்திற்குரிய சிம் கார்ட்டினை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருததுடன் அதன் ஒரு நகலையும் உருவாக்கி காட்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை செல்பேசி சேவை வழங்குனர்கள் சிம்கார்ட் ஹேக் செய்யப்படுவதனை தடுக்க அவற்றிலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Lankasri
Continue Reading | comments

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை

Prince William and Cate Middleton

இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.
15 காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.
பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.
கேட் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் மருத்துவமனைக்கு வெளியே பெருந்திரளான கூட்டம் கூடியிருந்தது.
(BBC Tamil)
Continue Reading | comments

(படங்கள் இணைப்பு) இரவு முழுக்க பேயிலிருந்து பாதுகாக்க வீடு வளவு காவல் பண்ணி கழிப்புச் சடங்கு செய்தவர் நண்பகலில் சடலமாக மீட்பு!

22 July 2013


(ஏறாவூர் அபூ பயாஸ் )

இரவு முழுக்க வீடு வளவு காவல் பண்ணி பேய்க்கு கழிப்புச் சடங்கு செய்தவர் இன்று நண்பகல் வீட்டிற்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த இளையதம்பி விமலநாதன் (வயது 37) என்று உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இவர் வீட்டினுள் இறந்து கிடப்பதாக ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு நீதிவானின் உத்தரவுக்கமைய ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ பரிசோதகர் எச்.பி.கே விக்ரமநாயக்க, பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் ஆகியோர் சடலத்தை மீட்டனர்.
இவர் நேற்று ஞாயிறு இரவு துவங்கி திங்கள் காலை வரை தாங்கள் குடியிருக்கும் வீட்டையும் வளவையும் பேய்களின் தொல்லைகளிலிருந்து காப்பதற்காக பேய்களுக்கு கழிப்புச் சடங்கு செய்து காவல் பண்ணும் கிரியைகளில் ஈடுபட்டிருந்தார் என்று அவரது மனைவி பிரியதர்ஷpனி (வயது 29) சாட்சியமளித்தார்.
சமீப சில நாட்களுக்கு முன்னர் தனது கணவர் உண்ணாமலும் உறங்காமலும் அவஸ்தைப் பட்டவர் என்றும் அதனால் வைத்தியர்கள் இவரை மனநல சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் மனைவி தனது சாட்சியத்தில் மேலும் சொன்னார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.





Continue Reading | comments

சார்ஜாவில் 2000 பேர் பங்கேற்ற இப்தார் - கின்னஸ் சாதனை படைத்தது (வீடியோ)



கின்னஸ் சாதனைக்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் நோன்பை நிறைவு செய்த ‘இப்தார்’ நிகழ்ச்சி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.

ஷார்ஜா நகராட்சி, ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில் துறை ஆகியவை உள்ளூர் போலீஸ் துணையுடன் ஏற்பாடு செய்த இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் 600 மீட்டர் நீள மேஜையின் மீது மனதை சுண்டி இழுக்கும் வகையில் நறுமணம் கமழும் பிரியாணி, பல்வகை கனிகள், பழச்சாறுகள் ஆகியவை பரிமாறப்பட்டன.

மாலை 5.30 மணியில் இருந்தே எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் திரண்டதால் மேஜையின் முன்னே இடம் பிடிப்பதில் போட்டாப் போட்டி ஏற்பட்டது.

‘நாடு, இனம் ஆகியவற்றை கடந்து ஆயிரக் கணக்கானவர்கள் இந்த விருந்தில் பங்கேற்றது கண் கொள்ளா காட்சியாக இருந்தது’ என்று இந்த விருந்தில் தனது மகனுடன் பங்கேற்ற பாகிஸ்தான் பெண்ணான முக்கத்தஸ் குஷி கூறினார்.



Continue Reading | comments

நியூசிலாந்தில் நிலநடுக்கம்


-அஹமட் ஆஸிர்-
நியூசிலாந்தில், நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், பார்லிமென்ட் கட்டடம் சேதமடைந்தது.நியூசிலாந்தின் பல பகுதிகளில், நேற்று நில அதிர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக, 6.5 ரிக்டர் அளவுக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், வெலிங்டன் நகரில், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. அந்நாட்டின் பார்லிமென்ட் கட்டடத்திலும் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
8949186earthquake
8948497
Continue Reading | comments

<|| Admin Message ||>

நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> LankaMirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutch அனுப்புங்கள்

Sri Lanka

Total Pageviews

INDIA News

World News

World Muslim

Science

தொழிநுட்பம்

அபூர்வமான நிகழ்ச்சிகள்

ஆன்மீகம்

Medical

Tips And Tricks

Topics :

Poems

Cinema

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved