நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Showing posts with label Ceylon. Show all posts
Showing posts with label Ceylon. Show all posts

(படங்கள் இணைப்பு) இரவு முழுக்க பேயிலிருந்து பாதுகாக்க வீடு வளவு காவல் பண்ணி கழிப்புச் சடங்கு செய்தவர் நண்பகலில் சடலமாக மீட்பு!

22 July 2013


(ஏறாவூர் அபூ பயாஸ் )

இரவு முழுக்க வீடு வளவு காவல் பண்ணி பேய்க்கு கழிப்புச் சடங்கு செய்தவர் இன்று நண்பகல் வீட்டிற்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த இளையதம்பி விமலநாதன் (வயது 37) என்று உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இவர் வீட்டினுள் இறந்து கிடப்பதாக ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு நீதிவானின் உத்தரவுக்கமைய ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ பரிசோதகர் எச்.பி.கே விக்ரமநாயக்க, பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் ஆகியோர் சடலத்தை மீட்டனர்.
இவர் நேற்று ஞாயிறு இரவு துவங்கி திங்கள் காலை வரை தாங்கள் குடியிருக்கும் வீட்டையும் வளவையும் பேய்களின் தொல்லைகளிலிருந்து காப்பதற்காக பேய்களுக்கு கழிப்புச் சடங்கு செய்து காவல் பண்ணும் கிரியைகளில் ஈடுபட்டிருந்தார் என்று அவரது மனைவி பிரியதர்ஷpனி (வயது 29) சாட்சியமளித்தார்.
சமீப சில நாட்களுக்கு முன்னர் தனது கணவர் உண்ணாமலும் உறங்காமலும் அவஸ்தைப் பட்டவர் என்றும் அதனால் வைத்தியர்கள் இவரை மனநல சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் மனைவி தனது சாட்சியத்தில் மேலும் சொன்னார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.





Continue Reading | comments

நிந்தவூரில் பிடிபட்ட சூரை மீன்கள் (படங்கள்)

20 July 2013



(சுலைமான் றாபி) 

இன்று 20.07.2013 காலை நிந்தவூர் கடலில் சுமார் 3000திற்கும் அதிகமான சூரை வகை மீன்கள் பிடிபட்டன. இதனால் ஒரு வகை சோடியின் விலை சுமார் ரூபா 300.00 தொடக்கம் ரூபா 600.00 வரை விற்பனை செய்யப்பட்டதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார். 

இதே வேளை அயல் கிராமமான  காரைதீவில் சுமார் 10,000 (பத்தாயிரத்திற்கு)ம்  அதிகமான மீன்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading | comments

முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 7 ஆம் திகதி சம்பளம் வழங்க கோரிக்கை

19 July 2013



(யு.எம்.இஸ்ஹாக்)



நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.



நோன்புப் பெருநாள் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி கொண்டாடப்படவுள்ளதால் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாகவும் இதற்கமைய தேவையான நிதி ஒதுக்கீடு சகல அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

JM

Continue Reading | comments

மட்டக்களப்பில் சட்டவிரோத ஆமைகள்,மலைப்பாம்புகள் கைப்பற்றப்பட்டது (படங்கள்)

18 July 2013



(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் காத்தான்குடிப் பொலிஸாரும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்;குட்பட்ட மட்டக்களப்பு நொச்சிமுனை கலைமகள் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ஐந்து ஆமைகள் மற்றும சுமார்; 9அடி நீளமுள்ள மலைப்பாம்பொன்றும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று 18ம் திகதி காலை மட்டக்களப்பு நொச்சிமுனை கலைமகள் வீதியிலுள்ள விடொன்றிலேயே குறித்த அருகி வரும் ஆமை இனத்தைச் சேர்ந்த ஐந்து ஆமைகளும் சுமார் 12வருடமாக வளர்க்கப்பட்டு வந்த சுமார் 9அடி நீளமான பாரிய மலைப்பாம்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் குமாரியிடம் கேட்ட போது,

நான் பல வருடங்களாக கோழி மற்றும் இவற்றை வளர்த்து வருவதாகவும் இவற்றைப் பார்வையிடுவதற்கு நிறையப் பேர் வீட்டுக்கு வருவதாகவும் இப்படி வளர்ப்பது சட்டவிரோதமானது என்பது தனக்கு தெரியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்வற்காக ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் இதனை வளர்த்து வந்த வீட்டு உரிமையாளர் குமாரி அக்காவை காத்தான்குடி பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று வியாழக்கிழமை சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ஐந்து ஆமைகளையும் சுமார்; 9அடி நீளமுள்ள மலைப்பாம்பையும் மட்டக்களப்பு நீதி மன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Jaffna Muslim
Continue Reading | comments

யானையுடன் மோதிய பஸ் - 7 பயணிகள் காயம்

16 July 2013



ஹபரண பகுதியில் யானையொன்று பஸ்ஸூடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். பொலனறுவையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். நேற்றிரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யானை மீது மோதிய பஸ் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஹபரண மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். NF
Continue Reading | comments

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சென்றவர் ஆற்றில் விழுந்து பலி


(ஜே.எம்.ஹபீஸ்)

மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேட்பாளர் ஒருவரது சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் அளவுக்கதிகமான மதுபோதையின் விளைவால் மரண மடைந்த சம்பவம் ஒன்று கட்டுகாஸ்தோட்டைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

61 வயதுடைய மேற்படி வயோதிபர் அதிகளவில் மது அருந்திய நிலையில் சுவரொட்டிகளை ஒட்டிய பின் வீடு நோக்கி நடந்து செல்கையில் ஆறு ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை யட்டிவாவல என்ற இடத்தைச் சேர்ந்த இவர் காலை முதல் மத்திய மாகாண சபைக்காக போட்டியிடும் உறுப்பினர் ஒருவரது சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதுடன், இரவு அதிக அளவில் மது அறுந்தி விட்டு வீட்டுக்க செல்லும் வழியில் அமைந்துள்ள ஆற்றுக்குள் விழுந்துள்ளார். (2013 07 15 அதிகாலை) அவ்வழியே சென்ற ஒருவர் இவரது சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது சம்பந்தமாக திடீர் மரண விசாரணை அதிகாரி விக்டர் வீரசிங்க விசாரணையை நடாத்தியதுடன் பிரேத பரிசோதனையை வைத்திய அதிகாரி எம்.ஆர்.திஸாநாயகக் நடாத்தினார். அதிக அளவில் மது அறுந்தி ஆற்றில் விழுந்ததன் காரணமாக இம் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

 Jaffna Muslim
Continue Reading | comments

பிக்குகள் ரவுடித்தனம் - தெமட்டகொடையில் இறைச்சி லொறிக்கு தீவைப்பு



தெமட்டகொடை பகுதியில் இன்று அதிகாலை மொஹமட் நியாஸ் என்ற முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமான இறைச்சி லொறியொன்றுக்கு 4 பிக்குகள் தீவைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இயைணத்திற்கு தகவல் தருகையில்,

ஒரு பிக்கெப் வாகனத்தில் வருகைதந்த 4 பௌத்த பிக்குகள் தெமட்டகொட பகுதியில் உள்ள நேநீர் கடையொன்றில் இருந்தபடி இறைச்சிகளை ஏற்றிச்செல்லும் லொறிகளை நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். இந்நிலையில் தீடிரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுக்கு தீவைத்துள்ளனர். லொறி தீபற்றியுள்ளதை அவதானித்த அங்கிருந்தவர்கள் ஓடிவரவே இந்த 4 பிக்குகளும் தாம் வந்த பிக்கெப் வாகனத்தில் ஓடித் தப்பியுள்ளனர் என்றார்.

- Jafna Muslim
Continue Reading | comments

<|| Admin Message ||>

நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> LankaMirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutch அனுப்புங்கள்

Sri Lanka

Total Pageviews

INDIA News

World News

World Muslim

Science

தொழிநுட்பம்

அபூர்வமான நிகழ்ச்சிகள்

ஆன்மீகம்

Medical

Tips And Tricks

Topics :

Poems

Cinema

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved