நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » , » தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சென்றவர் ஆற்றில் விழுந்து பலி

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சென்றவர் ஆற்றில் விழுந்து பலி


(ஜே.எம்.ஹபீஸ்)

மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேட்பாளர் ஒருவரது சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் அளவுக்கதிகமான மதுபோதையின் விளைவால் மரண மடைந்த சம்பவம் ஒன்று கட்டுகாஸ்தோட்டைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

61 வயதுடைய மேற்படி வயோதிபர் அதிகளவில் மது அருந்திய நிலையில் சுவரொட்டிகளை ஒட்டிய பின் வீடு நோக்கி நடந்து செல்கையில் ஆறு ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை யட்டிவாவல என்ற இடத்தைச் சேர்ந்த இவர் காலை முதல் மத்திய மாகாண சபைக்காக போட்டியிடும் உறுப்பினர் ஒருவரது சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதுடன், இரவு அதிக அளவில் மது அறுந்தி விட்டு வீட்டுக்க செல்லும் வழியில் அமைந்துள்ள ஆற்றுக்குள் விழுந்துள்ளார். (2013 07 15 அதிகாலை) அவ்வழியே சென்ற ஒருவர் இவரது சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது சம்பந்தமாக திடீர் மரண விசாரணை அதிகாரி விக்டர் வீரசிங்க விசாரணையை நடாத்தியதுடன் பிரேத பரிசோதனையை வைத்திய அதிகாரி எம்.ஆர்.திஸாநாயகக் நடாத்தினார். அதிக அளவில் மது அறுந்தி ஆற்றில் விழுந்ததன் காரணமாக இம் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

 Jaffna Muslim
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved