Home »
‘செய்தி’
» சிறிலங்காவின் 19 பகுதிகள் பூமியில் புதையுண்டு போகும் அபாயம்!
சிறிலங்காவின் 19 பகுதிகள் பூமியில் புதையுண்டு போகும் அபாயம்!
சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
பல பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாத்தளை மாவட்டத்தின் 19 பகுதிகள் காணாமல் போக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள மாறுதல் காரணமாக மாத்தளை மாவட்டத்தின் 19 பகுதிகள் பூமியினுள் புதையுண்டு போகும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாத்தளையில் நூறுக்கும் மேற்பட்ட இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக வெள்ளம், மண்சரிவு, புவியதிர்வு, உட்பட்ட பூமி புதைதல் போன்ற பல நிகழ்வுகளும் மாத்தளையின் பல பாகங்களில் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாத்தளை மாவட்ட புவியியலாளர் சமிந்த மொரேமட தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் காணப்படுவதால் அதனை அண்மிய பகுதியில் வாழும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் ஹெலன் மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment