பின்லாந்தில் லோக்ஜா என்ற இடத்தில் அமைந்துள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கம் சுமார் 115 ஆண்டு பழமையானதும் 1250 அடி ஆழமும் உடைய இச்சுரங்கத்தில் தற்போதும் சுண்ணாம்புக் கல் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் 260 அடி ஆழத்தில் ஒரு உணவு விடுதியொன்றினை பின்லாந்தின் சிறந்த சமையல் சுவை நிபுணர் பட்டம் வென்ற லின்னாமகி என்பவர் தொடங்கியுள்ளார்.
இங்கு நன்னீரில் வளர்க்கப்பட்ட மீன்கள் மற்றும் நத்தைகள் வறுவல் உணவு மற்றும் ஆப்பிள் ஜூஸ், குளிர்பானங்கள் போன்றவையும் வழங்கப்படுகிறது. இச் சுரங்கத்திற்குச் சென்றுவர நுளைவுக்கட்டணமாக 127 EURO வசூலிக்கப்படுகிறது.
இந்த உணவு விடுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சுரங்கத்துக்குள் உணவு வகைகளை சமைத்து பரிமாறுவது தனக்கு ஒரு புதிய அனுபவமாக உள்ளது என சமையல் கலை நிபுணர் லின்னாமகி தெரிவித்துள்ளார்.







No comments:
Post a Comment