
எரிகல் பொழிவை தெளிவாக காணும் வாய்ப்பு இன்றிரவு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது.
வருடாந்தம் தென்படும் ஜெமினிட் எனப்படும் இந்த எரிகல் பொழிவின் உச்சகட்டத்தை இன்றிரவு தெளிவாக காணமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன விடுத்துள்ள அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.
வானம் தெளிவாக தென்படக்கூடிய இடமொன்றிலிருந்து இரவு 9 மணியின் பின்னர் கீழ் வானிலும் நள்ளிரவு வேளையில் உச்சிவானத்திலும் அதிகாலை மேற்கு வானிலும் இந்த எரிகல் பொழிவை அவதானிக்க முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை இரண்டு மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியே இந்த எரிகல் பொழிவை காண்பதற்கு மிகவும் உகந்த தருணம் எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்






No comments:
Post a Comment