நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » பற்பசையில் விஷம் : குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு .!

பற்பசையில் விஷம் : குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு .!


ள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.  ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது. பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும். 

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.


From :- Puthiya Ulaham 
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved