நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » காங்கேயனோடை மீனவர்கள் இருவரை காணவில்லை

காங்கேயனோடை மீனவர்கள் இருவரை காணவில்லை



fishing boat (1)-எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ்-
காங்கேயனோடை வாவியில் திங்கட்கிழமை (17.12.2012) மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த  இரண்டு மீனவர்கள் வாவியில் வைத்து காணாமல் போயுள்ளயுள்ளதாக காங்கேயனோடையைச் சேர்ந்த மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.மதீன் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.
காங்கேயனோடை 13 வட்டாரத்தை சேர்ந்த எஸ்.எச்.சறூக் (42) மற்றும் ஏ.பி.றபாய்தீன் (34) ஆகிய இரண்டு மீனவர்களும் ஒரு தோணியில் காங்கேயனோடை வாவியில்  திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வாவியில் வீசிய பலத்த காற்றினால் தோணி கவிழ்ந்துள்ளது இதனால் இம் மீனவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளதாக அவர் கூறினார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மச்சான் மற்றும் மச்சினன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்கள் எனவும் தெரியவருகின்றது.
இவர்களை தேடும் நடவடிக்கையில் அப்பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருவதுடன் கடற்படையினருக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளதாக  பிரதேச சபை உறுப்பினர் மதீன் மேலும் தெரிவித்தனார்.
தோணி கவிழும் போது எங்களை காப்பாற்றுங்கள் என்று சப்தம் கேட்டதாகவும் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved