(Tn) சனிக்கிரகத்தின் துணைக் கோளான டைடனில் நைல் நதி போன்ற பாரிய நதி ஒன்று ஓடுவதை சனி மற்றும் அதன் துணைக் கோள்களை சுற்றிவரும் கஸ்ஸினி விண்கலம் அவதானித்துள்ளது.
பூமிக்கு அப்பால் இவ்வாறான ஒரு நதி கட்டமைப்பொன்று அவதானிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டைட்டனின் வட துருவத்தில் சுமார் 400 கிலோ மீற்றருக்கு ஓடும் திரவ நதியையே நாஸாவினால் அனுப்பப்பட்ட கஸ்ஸினி விண்கலம் அவதானித்துள்ளது. இந்த திரவ நதி ஹைட்ரோ கார்பனினால் நிரம்பியுள்ளது என ஊகிக்கப்படுகிறது.
பூமிக்கு அப்பால் திரவப் பொருளின் இயக்கம் கொண்ட ஒரே பகுதியாக டைடன் மாத்திரமே அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் டைடனிலுள்ள ஆறுகள், ஏரிகள், கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் ஈதேன் மற்றும் மீத்தேன் போன்ற திரவ ஹைட்ரோகார்பன்களால் நிரப்பப்பட்டுள்ளன.
:- Jaffna Muslims
No comments:
Post a Comment