நாசா மையத்தின் கியூரியாசிட்டி என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.இவற்றை நாசா விஞ்ஙானிகள் இயக்கிவருகிறார்கள். இந்நிலையில் தற்போது முதன் முறையாக செவ்வாய் கிரகத்தின் மணலை தோண்டி எடுத்து ஆய்வு செய்யும்போது புதிதாக வெள்ளை நிறத்தில் ஒளிரும் பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது நாசா விஞ்ஞானிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதற்கு முன்பும் இதுபோன்ற பொருள் இருந்தது குறிப்பிடத்தக்கது.இப்பொருள் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு வித்தியாசமான கணிம பொருளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது குறித்து ஆய்வு நடத்த செவ்வாய் கிரகத்தின் மற்றொரு பகுதியில் மணலை வெட்டி எடுத்து ஆய்வு செய்யுமாறு கியூரியாசிட்டி விண்கலத்துக்கு விஞ்ஞானிகள் கட்டளை பிறப்பித்துள்ளனர்.






No comments:
Post a Comment