யுடியூப்பில் 7 மாத குழந்தையின் கங்னம் ஸ்டைல் டான்ஸ் இப்போது கலக்கி வருகிறது. அப்லோடு செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் இதனை பார்வையிட்டுள்ளார்களாம்.
உலகம் முழுவதும் கங்னம் காய்ச்சல் பிடித்து ஆட்டுகிறது. இந்தியாவில் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடனம் கண்டிப்பாக இடம் பெறுகிறது. நம் செய்தி அதைப் பற்றியதல்ல.
7 மாத குழந்தை ஒன்று கங்னம் நடனமாடி அதை யுடியூப்பில் அப்லோட் செய்திருக்கின்றனர். 46 நிமிடம் ஓடக்கூடிய அந்த கிளிப்பிங்ஸ்சில் குழந்தையின் சிரிப்பும் நடனமும் இடம் பெற்றுள்ளது. ஒரு வார காலத்திற்குள் அந்த படக் காட்சியை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்களாம்.
எப்படி வந்தது கங்னம்?
கங்னம் என்பது தென் கொரியாவின் சியோலில் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். பாட்டுக்கும் இந்த மாவட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ச்சும்மா… ஒரு ப்ளோவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு பில்லியன் பார்வையாளர்கள்
தென் கொரியாவின் ராப் பாடகர் சி உருவாக்கி, கடந்த அக்டோபர் 4-ம் தேதி சியோல் சிட்டி ஹாலில் பாடி ஆடிய இந்தப் பாடலின் வீடியோ, கடந்த ஜூலை மாதம் யு டியூபில் அப்லோட் செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
மைக்கேலை விட அதிக புகழ்
யுடியூபில் இதுவரை வேறு எந்த புகழ்பெற்ற பாடகருக்கும் இத்தனை பெரிய பார்வையாளர் எண்ணிக்கை கிடைத்ததில்லை. மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களுக்குக் கூட அதிகபட்சமாக 10 மில்லியன் பார்வையாளர்கள்தான் கிடைத்துள்ளனர்.
குதிரை டான்ஸ்தான்
கிட்டத்தட்ட ஒரு குதிரை டான்ஸ் ஆடினால் எப்படியிருக்குமோ அப்படியொரு முரட்டுத்தனமான இந்த டான்ஸ் இன்று இணையத்தின் தயவால் இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட பிரபலமாகியிருக்கிறது.
பள்ளிக்குழந்தைகள் மத்தியில் பாப்புலர்
குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இந்த பாடல் ரொம்ப பாப்புலர். இப்போது 7 மாத குழந்தை ஆடிய கங்னம் டான்ஸ் இணைய உலகத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
45 கோடி வருமானம்
கங்னம் ஸ்டைல் பாடல் மூலம், யுடியூப் இணையதளத்துக்கு 45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மூலம் கிடைத்த இந்த வருவாய், அந்த பாடலின் உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிகேஷ் அரோரா தெரிவித்தார். தனித்தன்மையான நடனம், இசை போன்றவை இந்தப் பாடலுக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்ததாகவும் அவர் கூறினார்.
English summary
It has become such a world-wide hit that babies now Gangnam before they can walk. The video of the dancing baby was uploaded to YouTube on Friday and had racked up 775,000 hits on Wednesday night.