நோய்க்காரணமாக அசுர வேக வளர்ச்சிக்கொண்ட பெண் தனது 34 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற நகரமான லாஸ் வேகஸ் பகுதியை சேர்ந்த டான்யா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், கடந்த 12 வருடங்களாக தனது வயதுக்கு ஏற்ற உடற் பருமனை கொண்டிராமல் அதிக நிறையுடன் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் இறக்கும்போது 7அடி உயரமும் 400 இறாத்தல் நிறையும் கொண்டு காணப்பட்டுள்ளார். குதிரை சவாரி மற்றும் நடனம் என்பவற்றில் அதீத ஆர்வம் கொண்ட இவருக்கு காதலன் ஒருவரும் உள்ளார். இவர்21 வயதாக இருக்கும்போது 5அடி எட்டு அங்குல உயரத்துடனும் 130 இறாத்தல் நிறைகொண்டவராகவும் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு பியூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கட்டியானது அதிகமான ஹோமோன் வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன் அசுர வேக வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. பின்பு சக்கர நாற்காலியில் வலம் வரத் தொடங்கிய இவர் 7 அடி உயரமும் 400 இறாத்தல் நிறைகொண்டவராகவும் வளர்ச்சி அடைந்தார்.
ஒரு நாளில் தான் வழமைக்கு திரும்பி விடுவேன் என்ற அதிக எதிர்பார்ப்புடன் இருந்த இவர் தனது அசுர வேக வளர்ச்சியை தடுக்க பிரத்தியேகமாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இவருக்கு இரத்த சோதனை மேற்கொண்டபோது அவரது ஹோமோன் வளர்ச்சி வீதம் சடுதியாக குறைவடைந்திருந்தது. இதனால் தான் குணமாகிவிடுவேன் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார்.
'டான்யாவின் இரத்த அளவு வீதம் அவள் வழமைக்கு திரும்பி விடுவாள் என்ற நம்பிக்கையை அதிகரித்ததுள்ளது' என அவ்வேளை டான்யாவின் தாய் கரேன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 'அது எமக்கும் மீண்டும் நம்பிக்கையை தந்தது. நாங்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனாலும், குறுகிய காலத்தில் மீண்டும் அவரது வளர்ச்சி வேகம் அதிகரித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment