நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » சிங்கம் போன்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த நாயைக் கண்டு...

சிங்கம் போன்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த நாயைக் கண்டு...


சிங்கம் போன்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த நாயைக் கண்டு பீதியடைந்த அமெரிக்கர்கள்

அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி(911) தொலைபேசிஅழைப்புகள் வந்தன. காலை 10.20 மணிக்கு வந்த அழைப்பில், நார்ஃபோல்க் பகுதியில் இருந்து மிருகக் காட்சி சாலையில் தப்பிவந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு பெண் புகார் அளித்தார். அடுத்து வந்த அழைப்பில், பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித்திரிவதாக ஒருவர் கூறினார்.

இதைப்போன்று தொடர்ந்து அழைப்புகள் வரவே, உஷாரான போலீசார், விர்ஜினியா மிருகக் காட்சி சாலை நிர்வாகிகளை தொடர்புகொண்டு, அங்குள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும்படி அறிவுறுத்திவிட்டு, புகார் வந்த நார்ஃபோல்க் பகுதிக்கு துப்பாக்கிகளுடன் விரைந்தனர்.

வழியில் ஒருவர் சிங்கத்தை கட்டியிருந்த சங்கிலியை கையில் பிடித்தவாறு நடந்து போய்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த போலீசார், சிங்கத்தை எங்கே அழைத்துச் செல்கின்றீர்கள் என்று கேட்டபோது, 'இது சிங்கமல்ல..லேப்ரடார்-பூடுல் நாய்களுக்கு பிறந்த கலப்பின நாய்' என்று அவர் கூறினார்.

தனது மகளின் ஆசைப்படி, அதற்கு சிங்கத்தின் ரோம அமைப்பை போல், சிகை அலங்காரம் செய்து 'டை' அடித்து வளர்த்து வருவதாக தெரிவித்த அவர், எங்கள் நாய் இதுவரை யாரையும் பார்த்து குரைத்ததோ, கடித்ததோ கிடையாது என்று நற்சான்றிதழ் அளித்தபடி நடையை தொடர்ந்தார். இந்த செய்தி பத்திரிகைகள் மற்றும் டி.வி. சேனல்களில் ஒளிபரப்பானதும் சார்லஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்க்கும், அதன் உரிமையாளருக்கும் இப்போது ஏகப்பட்ட மவுசு.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved