சோசியல் வலைதளங்களில் முதன்மையானதாக வலம் வந்து கொண்டிருக்கும் டிவிட்டரில் நம்மைப்பற்றியும் நாம் இதுவரை கொடுத்திருக்கும் டிவிட் பற்றி வகைகள் பற்றியும் புள்ளிவிபரத்துடன் கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
டிவிட்டரில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கிறார்கள் என்பதில் தொடங்கி நாம் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் கொடுத்து உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://twtrland.com
இத்தளத்திற்கு சென்று Search என்று இருக்கும் கட்டத்திற்குள் நம் டிவிட்டரின் பயனாளர் பெயர் கொடுத்து Enter சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கின்றனர், இதுவரை நாம் எத்தனை டிவிட் செய்திருக்கிறோம்,அதிகமாக டிவிட்டரில் நாம் பயன்படுத்தும் வார்த்தை, இணைப்பு (Link) கொடுத்துஎத்தனை டிவிட் செய்திருக்கிறோம், Link இல்லாமல் எத்தனை டிவிட் செய்திருக்கிறோம், எத்தனை டிவிட் செய்திகளை ரீடுவிட் செய்திருக்கிறோம் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்கின்றனர். யாருடைய டிவிட்டர் பயனாளர் பெயரும் கொடுத்து நாம் அவர்களை பின் தொடர்பவர்கள் மற்றும் அவர்கள் செய்த டிவிட் என அனைத்தையும் முழுமையான தெரிந்து கொள்ளலாம், டிவிட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.