நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » புதுவரவுகள்-(MA-107 Smart Box, Amazon Coins, Galaxy Young மற்றும் Galaxy Fame)

புதுவரவுகள்-(MA-107 Smart Box, Amazon Coins, Galaxy Young மற்றும் Galaxy Fame)


Android 4.0 MA-107 எனும் Smart Box

Archos அறிமுகப்படுத்தும் Android 4.0 MA-107 Smart Box

Archos அண்மையில் Android 4.0 MA-107 எனும் Smart Box இனை அறிமுகப்படுத்தியுள்ளது. Android 4.0 Ice Cream Sandwich (ICS) ஐ இயங்குதளமாக கொண்டிருக்கும் இந்த Smart Box ஆனது இருபக்க ஒலிபெருக்கிகளுக்கு மத்தியில் 1024 x 600 pixel TFT தொடு திரையை கொண்டிருப்பதுடன் 1 GHz வேகத்தில் Rockchip RK2918 ARM Cortex-A8 வகையுடைய processor மற்றும் 512MBRam, 8GB உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளது.
--> 

இது தவிர இதனை 130 degree கோணத்தில் பார்க்க முடிவதுடன் 2 megapixel திறனுடைய முன்பக்க Camera மற்றும் 2000mAh திறனுடைய battery ஐயும் கொண்டுள்ளதுடன் USB, microSD card போன்றவ்றினை பயன்படுத்துவதற்கான வசதிகள் மற்றும் 802.11n WiFi போன்றவற்றினை தன்னகமாக கொண்டுள்ள இந்த Smart Box இன் அறிமுகவிலை $200 ஆகும்.
  

Amazon Coins
Amazon ஆனது Amazon Coins எனும் நாணயத்தினை அறிமுகப்படுத்துகின்றது.

இணையத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் மிகப்பெரும் இணையதளங்களுள்  ஒன்றான Amazon அதனது வணிக வட்டத்துக்குள் செல்லுபடியாகக் கூடிய Amazon Coins என்றழைக்கப்படும் புதிதொரு நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது Kindle Fire tablet ஊடாக Games, Applications மற்றும் in-app items போன்றவற்றினை கொள்வனவு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடம் May மாதமளவில் US இல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மேலதிக தகவலுக்கு  Amazon Coins FAQ


Samsung Galaxy Young Smartphone

Samsung  இன் Galaxy Young Smartphone

Samsung ஆனது Android 4.1 Jelly Bean ஐ கொண்ட Galaxy Young எனும் புதிய Smartphone ஐ அறிமுகப்படுத்துகின்றது. இது 3.27 அங்குல HVGA TFT திரையுடன் 1GHz வேகத்திலான processor மற்றும் 768MB RAM போன்றவற்றினை கொண்டுள்ளது.

மேலும் 4GB உள்ளக நினைவகத்தை கொண்டிருக்கும் இதனை microSD card மூலம் 64GB வரை அதிகரித்துக்க்கொள்ளும் வசதியுமுள்ளது.அத்துடன் 3 megapixel திறனுடைய rear camera உடன் 1,300 mAh திறனுடைய battery மற்றும் NFC, WiFi Direct and Bluetooth ஆகிய வசதிகளைக்கொண்டுள்ள இந்த Smartphone இல்இரண்டு SIMஅட்டைகளை பயன்படுத்த முடியுமென்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலதிக தகவல் மற்றும் விலை போன்றன இதுவரை வெளியிடப்படவில்லை. 


Samsung Galaxy Fame

Galaxy Young இற்கு அடுத்த படியாக 
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Fame

Samsung ஆனது Galaxy Young எனும் புதிய Smartphone க்கு அடுத்த படியாக Galaxy Fame என்ற இன்னுமொரு Smartphone ஐ அறிமுகப்படுத்துகின்றது. இது  3.5 அங்குல HVGA TFT திரையுடன் 1GHz வேகத்திலான processor மற்றும் 512MB RAM ஆகியவற்றுடன் 4GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ளதுடன் இதன் நினைவகத்தை microSD card மூலம் 64GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதியுள்ளது. பெரும்பாலும் ஒத்துக்கானப்படும் Galaxy Young மற்றும் Galaxy Fameஆகியன ஒருவேளை Twins ஆக இருக்குமோ என எண்ணத்தோன்றுகின்றது.

 மேலும் Galaxy Fame ஆனது Auto focus மற்றும் LED flash ஆகிய அம்சங்களுடன் கூடிய 5 megapixel திறனுடைய முன்பக்க Camera உடன் A-GPS, Bluetooth 4.0, USB 2.0 மற்றும் NFC, 1,300 mAh திறனுடைய battery போன்ற அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது தற்போதைக்கு இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

Thahawal tholinutpam

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved