(Tn) சூரியனில் ஏற்பட்ட பாரிய வெடிப்பை தொடர்ந்து ஒரு பயங்கர பிளஸ்மா சுனாமி ஒன்று ஏற்பட்டதை இரு செய்மதிகள் அவதானித்துள்ளன.
இந்த சூரிய சுனாமியை நாஸாவின் சூரிய அதிர்வுகள் தொடர்பான அவதானிப்பகம் மற்றும் ஜப்பானின் ஹினொட் விண்கலம் ஆகியனவே அவதானித்துள்ளன. சூரியனின் காந்தப்புலத்தில் இவ்வாறான ஒரு தெளிவான கணிப்பை பெற முடிந்தது இதுவே முதல் முறை என குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட இந்த பாரிய வெடிப்பை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமி அலை வினாடிக்கு 1000 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்ததாக கணிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment