இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து படகுகள் மூலம் வருபவர்களை இனி அகதிகளாகக் கருதி அடைக்கலம் வழங்க முடியாது என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு சட்டவிரோதமாக வரும் அனைவரும் வறுமையில் வாடும் பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய எல்லை பாதுகாப்புக் கொள்கையை அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார்.
இதன் ஒரு பகுதியாக, மண்டல குடியிருப்பு ஏற்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் மற்றும் பப்புவா நியூ கினியா பிரதமர் பீட்டர் ஓ நீல் ஆகியோர் வெள்ளிக்கிழமை கையெத்திட்டனர். உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தம், தொடக்கத்தில் ஓராண்டுக்கு அமலில் இருக்கும். ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்யப்படும்.
இதுகுறித்து கெவின் ரூட் கூறியதாவது: படகுகள் மூலம் வரும் வெளிநாட்டினர் இனி அகதிகளாக ஆஸ்திரேலியாவில் குடியேற முடியாது. அவ்வாறு வருபவர்கள் விவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக பப்புவா நியூ கினியாவில் மனுஸ் தீவு, பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மதிப்பீட்டின் போது உண்மையான அகதிகள்தான் என தெரியவந்தாலும், கடுமையான புதிய எல்லை பாதுகாப்புக் கொள்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் குடியேற முடியாது. ஆய்வின்போது, அகதிகள் அல்ல என தெரியவந்தால், சொந்த நாட்டுக்கோ அல்லது மூன்றாவது நாட்டுக்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் பாப் கார் கூறுகையில், ""இந்தோனேசியா வழியாக விசா இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது. அங்கு சென்ற பிறகு விசா வழங்கப்பட்டது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோதமாக இலங்கை மற்றும் ஈரானிலிருந்து படகுகள் மூலம் இந்தோனேசியா வழியாக வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மிகவும் ஆபத்தான இந்தப் பயணத்தைத் தடுக்கும் விதத்தில் புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் இந்தக் கொள்கைக்கு இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளது'' என்றார்.
இது தொடர்பாக, இந்த மாத தொடக்கத்தில் கெவின் ரூட் மற்றும் இந்தோனேசிய அதிபர் சிசிலோ பம்பங் யுதோயோனோ ஆகியோர் ஜகர்த்தாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எல்லை பாதுகாப்பை பலப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
JM

No comments:
Post a Comment