
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியொன்றில் புர்கா தடையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது பல நூற்றுக்கணக்கானவர்கள் போலிஸ் நிலையமொன்றைத் தாக்கியுள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடனான புர்காவை பொது இடங்களில் அணிவதற்கு பிரான்ஸில் தடை உள்ளது.
தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், மனித உரிமை, தாக்குதல்
முழுமையாக முகத்தை மூடியபடி புர்கா அணிந்திருந்த பெண்ணொருவரை எச்சரித்த போலிசாரை அந்தப் பெண்ணின் கணவர் முன்னதாக தாக்கியுள்ளார்.
போலிசாரைத் தாக்கிய அந்த இளைஞரை போலிசார் கைது செய்தநிலையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டம் வெடித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது போலிசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளன. வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான சட்டத்தின்படி, நிக்காப், புர்கா அல்லது முழுமையாக முகத்தை மூடும் அங்கியை அணிவோருக்கு 150 யூரோ வரை தண்டப்பணம் விதிக்கப்படும்.
சாலைகள், கடைத்தெருக்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் இந்தத் தடை உள்ளது. Bbc
JM
JM






No comments:
Post a Comment