] |
அப்பிள் நிறுவனத்துடனான மோதலுக்கு மத்தியிலும் இலத்திரனியல் உற்பத்தியில் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கும் சம்சங் நிறுவனம் 8 அங்குலமே உடைய Samsung Galaxy Note எனும் புத்தம் புதிய சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்த தயாராகின்றது.
ஏற்கணவே 5 அங்குலம், 10 அங்குல அளவுகளில் Galaxy Note சாதனங்களை அறிமுகப்படுத்தியிருந்த சம்சங் நிறுவனம் தற்போது 8 அங்குலள அளவுடைய Galaxy Note - இனை உருவாக்கியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனமானது 1280 x 800 Pixel Resolution மற்றும் SLCD தொழில்நுட்பத்தில் அமைந்து தொடுதிரையினைக் கொண்டுள்ளதோடு பிரதான நினைவகமாக 2GB RAM, மற்றும் 16GB, 32GB அளவுகளை உடைய சேமிப்பு சாதனங்களையும் உள்ளடக்கியுள்ளன.
தவிர 5 மெகாபிக்சல் கமெரா, 4300mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ள இச்சாதன்தின் எடையானது 330 கிராம்களாக காணப்படுகின்றது.
|
Home »
தொழிநுட்பம்
» விரைவில் அறிமுகமாகின்றது 8 அங்குலமே உடைய Samsung Galaxy Note
விரைவில் அறிமுகமாகின்றது 8 அங்குலமே உடைய Samsung Galaxy Note
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment