ஐஸ்லாந்து அதிகளவில் வெந்நீரூற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐஸ்லாந்து தீவு முழுவதும் இவ்வகையான வெந்நீரூற்றுகள் பரவிக் காணப்படுகின்றன.
5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீற்றர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று Strokkur என்ற இடத்தின் அருகில் காணப்படுகின்றது.
வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும்.
குறிப்பிட்ட சில நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது.
No comments:
Post a Comment