ஃபிளாஷ் பேனர் அனிமேசன் உருவாக்க வேண்டும் என்றால் பிளாஷ் மென்பொருள் நன்றாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் மற்றும் ஏற்கனவே பல அனிமேசன் உருவாக்கி இருந்தால் தான் எளிதாக இருக்கும் என்ற எந்த கட்டாயமும் இல்லாமல் இணையம் வழியாகவே அனிமேசன் உருவாக்கி நம் இணையத்தில் அல்லது வலைப்பூவில் இடம் பெற செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
உலாவி வழியாகவே
மக்களின் அனைத்து
தேவைகளும் நிறைவேற்ற
வேண்டும் என்ற
நோக்கில் பல
இணையவழி அப்ளிகேசன்
வந்து கொண்டு
தான் இருக்கிறது
அந்த வகையில்
இணையம் வழியாக
பிளாஷ் அனிமேசன்
எளிதாக சில
நிமிடங்களில் உருவாக்க நமக்கு ஒரு தளம்
உதவுகிறது இதைப்பற்றி
இனி விரிவாக
பார்க்கலாம்.
இணையதள முகவரி
: http://bannernow.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல்
காட்டியபடி Create Banner Now என்ற பொத்தானை
சொடுக்கி நாம்
பிளாஷ் பேனர்
உருவாக்க ஆரம்பிக்கலாம்.
அடுத்து வரும்
திரையில் பிளாஷ்
கோப்பின் பேனர்
அளவு (Size) எவ்வளவு இருக்க வேண்டுமோ அதை
கொடுக்க வேண்டும்
ஏற்கனவே இருக்கும்
அளவுகளில் இருந்தும்
தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பின்
Create Baneer என்ற பொத்தானை சொடுக்க
வேண்டும் அடுத்து
வரும் திரையில்
இருந்து என்ன
பேக்ரவுண்ட் கலர் வேண்டும் என்பதில் தொடங்கி
என்ன படம்
வைக்க வேண்டும்
எழுத்துக்கள் எந்தவிதமான அனிமேசனில் தெரிய வேண்டும்
என அனைத்தையுமே
நம் விருப்பப்படி
தேர்ந்தெடுக்கலாம். இடது பக்கம்
மேல் இருக்கும்
Preview Banner என்பதை சொடுக்கி முன்னோட்டம்
பார்க்கலாம், எல்லாம் சரியாக இருந்தால் Download Banner Swf என்பதை சொடுக்கி
உருவாக்கிய அனிமேசனை நம் கணினியில் சேமித்து
பயன்படுத்தலாம். புதுமை விரும்பிகளுக்கும் வெப்தளங்களில் எளிய
பிளாஷ் அனிமேசன்
உருவாக்க விரும்புபவர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.