எத்தனையோ பழங்கள் இருந்த போதும் ரம்புட்டான் மட்டும் வித்தியாசமானது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த பழம். ரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த பழமரத்தாவரம்.
ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது.
ரம்புட்டான் , தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். அமெரிக்கா , மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது. இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன.
ரம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதேபோன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் .
July மாதம் இந்த பழ சீசன் ஆகும். அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும். ரம்புட்டான் பழம் மஞ்சள், சிவப்பு என இரண்டு வகைகளில் உண்டு.
இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. ரம்புட்டான் சாப்பிட முன்னர் பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும்.
கழுவிய பின்னரும் கூட ரம்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம். கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ணுங்கள். இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.
ரம்புட்டான் வளர்ச்சி நீர் கிடைப்பதை பொறுத்து புதிய கிளைகள் மற்றும் இலைகள் உருவாக்கும். திராட்சை போல சிறிது ஒன்றாக குழுவாக இருக்கும்.
வளர்ச்சி நிலையை பொறுத்து சதை, வெவ்வேறு சுவையை கொண்டிருக்கும், அதிக அமில எனினும், லிச்சி ஒத்த ஒரு, இனிப்பு, புளிப்பு மற்றும் மணம் சுவை, கொண்டிருக்கிறது.
இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். ரம்புட்டான் பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து - 82.3g, புரதம் - 0.46g, கார்போஹைட்ரேட் - 16.02g, சர்க்கரை - 2.9g, நார்சத்து - 0.24g, கல்சியம் - 10.6 mg, பொஸ்பரஸ்- 12.9mg உள்ளது.
இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
-MB
No comments:
Post a Comment