சவூதி அரேபிய கோடிஸ்வரர் சுலைமான் அல் ராஜி அவர்கள் தனது ஆடம்பர வாழ்க்கையை விட்டு விலகி வெளிநாட்டு ஏழைத் தொழிலார்களுடன் ஒன்றுகலந்து தனது தாயாரால் கட்டப்பட்ட பள்ளிவாயலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
80 வயதுடைய இந்த கோடிஸ்வரர் நண்பர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அடங்கலாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் மக்காவில் கடந்த புதன்கிழமை நோன்பு திறப்பதை கீழே இணைக்கப்பட்டுள்ள 90 வினாடி YouTube யில் காணமுடியும்
இந்த வீடியோவில் அவர் தாடியுடன் வெள்ளை நிற அங்கி அணிந்தவராக தனது முதுமையின் காரணமாக கதிரையில் அமர்ந்திருப்பதை காணமுடியும்.
சவுதி அரேபியா ஒரு பரந்த முதலீட்டு பேரரசை அல் ராஜி கட்டுப்படுத்துகிறது, அதில் கோழிப்பண்ணை மற்றும் ஆலிவ் திட்டங்கள் குறிப்பிடத்தக்கது.
இவரது சொத்து மதிப்பு 5.9 பில்லியன் அமிரிக்க டொலர் ஆகும்
No comments:
Post a Comment