ஆப்பிரிக்காவில் உள்ள கினியா நாட்டில் கிறுஸ்தவ மதத்தை சார்ந்த குயெர்ஸ் மற்றும் முஸ்லிம் மதத்தை சார்ந்த கொனியாங் இன மக்களிடையே பல பிரச்சினைகள் பொருட்டு நீண்ட காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கொனியாங் இனத்தை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் பங்கில் திருடி விட்டார் என குயெர்ஸ் இன காவலர்கள் அவரை அடித்து கொன்றுவிட்டனர். இதனையடுத்து அந்த இரு இன மக்களிடையே திங்கள் முதல் ஆங்காங்கே இன மோதல்கள் நடந்தன.
இதில் நேற்று செரெகோர் என்னுமிடத்தில் வெட்டுக்கத்திகளை கொண்டு அவர்கள் தாக்கிக்கொண்டதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து செரெகோர் நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இவர்களிடையே நடக்கும் இனமோதல்களை அடுத்து நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேர்தலை வரும் செப்டம்பரில் நடத்த பேச்சுவார்த்தைக்கு அதிபர் ஆல்பா கோண்டா அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment