நோர்வே நாட்டின் டெலிமார்க் பகுதியில் இருக்கும் டின் நகராட்சியில் உள்ள ருஜுகான் என்ற இடம் ஒரு தொழிற்பேட்டை நகரமாகும். மத்திய நார்வேயில் உள்ள இந்தப் பகுதி ஒரு குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதால் குளிர்காலத்தில் இந்நகரத்தின் மீது சூரிய வெளிச்சம் படாது.
1907-ம் வருடம் இங்குள்ள நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவர்தான் இந்த நகரத்தையும் உருவாக்கினார். அப்போதே குளிர்காலத்தில் இங்குள்ளோர் சூரிய வெளிச்சம் பெறுவதற்கு வழி செய்ய நினைத்துள்ளார். இருப்பினும், அப்போது நவீன தொழில்நுட்பம் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள மலைக்கு கேபிள் கார் இணைப்பினை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
குளிர்காலத்தில் இந்தக் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று மக்கள் சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு மாற்றுத் தீர்வினைக் குறித்து ஆலோசித்து அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தும் முடிவினை எடுத்தனர்.
இந்த எண்ணம் ஆரம்பத்திலிருந்தே இருந்தபோதும், இந்த 1-ந்தேதிதான் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் கண்ணாடிகளில் படும் சூரியக் கதிர்களின் வெளிச்சம் பிரதிபலிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment