மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவ மனையில் தஞ்சம் கிடக்கும் ஒரு தாயின் குழந்தை பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தியே இது. பிறந்து 18 மாதங்களே ஆன ஒரு குழந்தை தோல் சுருங்கி வயதான தோற்றத்துக்கு மாறினால் எந்த தாய்க்குத்தான் மனம் பதறாமல் இருக்கும்?சீனாவில் வசிக்கும் 23 வயதே ஆன இளம் தாய் யாங். இவருக்கு கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் ஒரு குழந்தை பிறந்தது. அதுதான் யுக்சீன் என அழைக்கப்படுகிறது. குழந்தை வளரத்தொடங்க அதன் சருமத்தில் மாற்றங்களை அவதானித்திருக்கிறார் யாங். இருந்தும் இதனை பலரிடம் சொல்லியும் ஒரு பெரிய விடயமாக அது எடுத்துக்கொள்ளப்படவில்லை.
காலப்போக்கில் குழந்தையின் தோல் தொய்ந்து கழுத்து கன்னம் முகம் போன்ற பகுதிகள் முற்றாக சுருங்க ஆரம்பித்துள்ளது. இதன் பின்னர் டாக்டர்டர் உதவியை நாடினார் யாங். குழந்தையை பரிநோதனை செய்த வைத்தியர்கள் இந்நோக்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்கமுடியாமல் தவித்தனர்.
எனினும் இரு ஒரு பரம்பரை நோய் அல்லது திசு சம்மந்தப்பட்ட நோயாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றார்கள். மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் போது ஏதாவது தவறுகள் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றார்கள்:
எது எப்படியோ இதனை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க அதிக பணம் தேவைப்படுவதாக டாக்டர்கள் அறிவித்துள்ளார்கள். பணம் என்பதை கருத்தில் கொள்ளாது மனம் ஒன்றே போதும் என குழந்தையும் வைத்திசாலையுமாக தனது வாழ்க்கைய கழித்துக்கொண்டிருக்கிறார் யாங். இருந்து குழந்தை இதுவரை முற்றிலும் குணமானதாக தெரியவில்லை. பார்ப்பதற்கு அச்சு அசல் வயதான தோற்றத்துடனயையே இருக்கிறது. இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த யாங் தான் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டுவரும் போது ஏனைய குழந்தைகள் அதைப்பார்த்து பயப்படுகின்றது. இதனை என்னால் பொறுக்க முடியவில்லை. நான் வேதனை தாங்காது அழுதுவிடுகிறேன் என தனது சோகத்தை கொட்டித்தீர்தார். எது எப்படியோ தனது குழந்தையை குணப்படுத்த முடியும் என தான் முழு நம்பிக்கையுடன் இருப்பதாக அவர்குறிப்பிட்டார்.
From :- Puthiya Ulaham









No comments:
Post a Comment