(எம். எஸ். பாஹிம்) சவூதி அரேபியாவில் மர்ம தொற்றுநோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுவதால் இலங்கையில் இருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கவும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஹஜ் விவகார குழுவின் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தெரிவித்தார்.
சவூதியில் மர்ம நோயொன்று பரவி வருவதால் ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹஜ் யாத்திரிகர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சவூதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் அறிவுறுத்தல் தங்களுக்கு கிடைக்காத போதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறிய அமைச்சர் ஏ. எச். எம். பெளசி, தடுப்பூசிகள் ஏற்றவும் ஏனைய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்ளதாக குறிப்பிட்டார்.
‘மெர்ஸ்’ எனும் பெயருடைய ஒரு வகை சுவாச தொற்று நோய் உலகின் பல நாடுகளில் பரவி வருவதோடு சவூதியில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38 பேர் இறந்துள்ளனர்.
எனவே, முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் போன்றோர் ஹஜ் பயணத்தை தவிர்க்குமாறும் சவூதி அரேபியா கோரியுள்ளது.
இம்முறை இலங்கையில் இருந்து 2800 ஹஜ் யாத்திரிகள் ஹஜ் யாத்திரை செல்ல முதலில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சவூதியில் விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் 2240 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா ஹஜ் யாத்திரிகர்களின் தொகையும் 50 வீதத்தினால் குறைக்கப்பட் டுள்ளது.
விஸ்தரிப்பு பணிகள் நிறைவடைவதோடு அடுத்த வருடம் கூடுதல் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் கூறினார்.
JaffnaMuslim
JaffnaMuslim
No comments:
Post a Comment